83 டிரெய்லர்
          இது 1983 உலகக் கோப்பை வென்ற கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். 1983 உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டனான கபில்தேவின் பயணத்தை மையமாகக் கொண்ட  படமாகும். இப்படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்திலும், தாஹிர் பாசின் சுனில் கவாஸ்கராகவும், சாகிப் சலீம் மொஹிந்தர் அமர்நாத் வேடத்திலும், சிராக் பாட்டீல் சந்தீப் பாட்டீலாகவும் நடிக்கின்றனர். 

         
        தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தில் கபில்தேவின் மனைவி ரோமி தேவ் கேரக்டரில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மது மாட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 24 டிசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.