| பிக் பாஷ் தொடரில் சதம் அடித்து சாதனை ஸ்மிருதி மந்தனா. |
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'பிக் பாஷ்' t20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியிலிருந்து 8 வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளார்கள். மெக்காய் நகரில் நேற்று நடந்த லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய மெல்போர்ன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், 55 பந்தில் 81 ரன்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய சிட்னி அணிக்கு ஸ்மிருதி மந்தனா, 64 பந்தில் 14 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 114 ரன்கள் குவித்த போதும் 20 ஓவரில் 171/2 ரன் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. ஹர்மன்பிரீத் கவுர், சிறந்த வீராங்கனை ஆனார்.
மந்தனா சாதனை
நேற்று 114 ரன் எடுத்த மந்தனா, 'பிக் பாஷ்' தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார். தவிர 'பிக் பாஷ்' தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த ஆஷ்லே கார்டுனர் (2017ல், 114) சாதனையை சமன் செய்துள்ளார். தவிர சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 'பிக் பாஷ்' அரங்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஆனார் ஸ்மிருதி மந்தனா.

0 Comments