நியூசிலாந்துக்கு எதிரானஇந்தியஅணி

 

     நியூசிலாந்துக்கு எதிரான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இம்மாதம் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்கவிருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்அறிவிக்கப்பட்டுள்ளனர்.


     இம்மாதம் 14 ஆம் தேதி உடன் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து  அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது 20 ஓவர் போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும்  மற்றும் இறுதி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.


  • ரோஹித் சர்மா (கேப்டன்)
  • கே.எல். ராகுல் (துணை கேப்டன்)
  • ருதுராஜ் கெய்க்வாட்
  • ஷ்ரேயாஸ் ஐயர்
  • சூர்யகுமார் யாதவ்
  • ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
  • இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
  • வெங்கடேஷ் ஐயர்
  • யுஸ்வேந்திர சாஹல் 
  • ஆர்.அஷ்வின்
  • அக்சர் படேல்
  • அவேஷ் கான்
  • புவனேஷ்வர் குமார்
  • தீபக் சாஹர்
  • ஹர்ஷல் படேல்
  • முகமது சிராஜ்