இரண்டாவது முறையாக தொடர்ந்து கோப்பையை
வென்ற தமிழ்நாடு அணி !!!


     நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி  கோப்பையை வென்றுள்ளது.

     முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணி 152 ரன்களை தமிழ்நாடு அணிக்கு இலக்காக  நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். மிடில் ஆர்டரில் சற்று தடுமாறிய தமிழ்நாடு அணிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் ஆல்ரவுண்டர் ஷாருக்கான் களமிறங்கினார்.
     கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு இமாலய சிக்சர் அடுத்து ஷாருக்கான் தமிழ்நாடு அணிக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தார். கடந்த முறை கர்நாடகா அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய போது கடைசி பந்தில் தோற்ற தமிழ்நாடு அணி தற்போது அதற்கு இந்த வெற்றி மூலம் ஈடுகட்டியுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒரு முக்கிய நட்சத்திர வீரராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் ஷாருக்கான் 15 பந்துகளில் 33 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் மூன்று சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும்.