சிகிச்சை முறைகள்

*எலெக்ட்ரோ தெரபி (Electro Therapy)

எலெக்ட்ரோ தெரபி (Electro Therapy) சிகிச்சை என்பது உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும். பெரும்பாலும் வலியைப் போக்கத்தான் மின் சாதனங்களின் துணையுடன் இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


*மேனுவல் மற்றும் இயந்திர முறை தெரபி (Manual and Mechanical Therapy)

இந்த சிகிச்சை முறையில் பிசியோதெரபிஸ்ட் தன் கைகளைக்கொண்டே நோயாளியின் தசைகள் மற்றும் மூட்டுகளை அசைத்து பயிற்சியளிப்பார். இம்முறைைக்கு மேனுவல் மற்றும் இயந்திர முறை தெரபி (Manual and Mechanical Therapy) ஆகும்.


*உடற்பயிற்சி தெரபி (Exercise Therapy)

குறிப்பிட்ட உடல் அசைவுகளைச் செய்யவைப்பது மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் சிகிச்சையளிப்பது உடற்பயிற்சி தெரபி (Exercise Therapy) சிகிச்சையாகும்.




பிசியோதெரபி சாதனங்கள் 


வெப்ப சாதனங்கள் (Thermal Based Equipments)

     வெப்ப சாதனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தசைகளுக்கு கருவிகள் மூலம் வெப்பம் செலுத்தப்படும். அந்த வெப்பத்தால் ரத்த ஓட்டம் அதிகமாகி வலி குறைந்து, தசைகளின் இயக்கம் சீராகிறது.

  • ஷார்ட்வேவ் டயாதெர்மி (Shortwave Diathermy)
  • மைக்ரோவேவ் டயாதெர்மி (Microwave Diathermy)
  • இன்ஃப்ராரெட் ரேடியேஷன் (Infrared Radiation)
  • அல்ட்ரா சவுண்ட் (Ultrasound)
  • க்ரையோதெரபி (Cryotherapy)
  • வாக்ஸ் தெரபி (Wax Therapy)
  • ஹைட்ரோ கொலேட்டர் தெரபி (Hydro Collator Therapy)


போட்டோகெமிக்கல் சாதனங்கள் (Photochemical Based Equipments)

     வலி இருக்கும் தசைகள் மற்றும் தசைநார்களுக்குள் லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களைச் செலுத்தி செய்யப்படும் சிகிச்சைக்கு போட்டோகெமிக்கல் சாதனங்கள் உதவுகின்றன. இந்தக் கதிர்கள் சருமநோய்களைச் சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

  • லேசர் தெரபி (Laser Therapy)
  • அகச்சிவப்புக் கதிர் தெரபி (UVR Therapy)


மின் சாதனங்கள் (Electric Current Based Equipment)

     கீழ்க்காணும் கருவிகள் மூலமாக மின்சாரத்தைச் செலுத்தும்போது தசைகள் சுருங்கி விரிகிறது. இதனால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி வலி குறைகிறது.

  • டிரான்ஸ்குடேனியஸ் எலெக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேட்டர் (Transcutaneous Electrical Nerve Stimulator - TENS)
  • மசில் ஸ்டிமுலேடர் (Muscle Stimulator)
  • இன்டர்ஃபெரன்ஷியல் தெரபி (Interferential Therapy)
  •  ஃபங்ஷனல் எலெக்ட்ரிகல் ஸ்டிமுலேடர் (Functional Electrical Stimulator)
  • வேக்வம் தெரபி (Vacuum Therapy).


இயந்திர சாதனங்கள் (Mechanical Based Therapy)


பாதிக்கப்பட்ட தசைகளில் சில கருவிகளின் வழியாக வெளிப்புறத்திலிருந்து விசைகளைச் செலுத்தி, உடல் பாகத்தைச் சுருங்கி விரியச் செய்யும் சிகிச்சைக்கு இயந்திர சாதனங்கள் (Mechanical Based Therapy) பயன்படுத்தபடுகின்றன.


  • இன்டர்மிட்டென்ட் செர்விகல் ட்ராக்‌ஷன் தெரபி (Intermittent Cervical Traction Therapy)
  • இன்டர்மிட்டென்ட் பெல்விக் ட்ராக்‌ஷன் தெரபி (Intermittent Pelvic Traction Therapy)
  • கம்ப்ரெஷன் தெரபி (Compression Therapy)
  • ஹைட்ரோ தெரபி (Hydro Therapy).


பிசியோதெரபியில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்


  • ஷாக்வேவ் டயாதெர்மி (Shockwave Diathermy)
  • காம்பினேஷன் வேவ் டயாதெர்மி (Combination Wave Diathermy)
  • லாங்வேவ் டயாதெர்மி (Longwave Diathermy)
  • மேக்னெடோ தெரபி (Magneto Therapy).