நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படம் நாளை (நவ.2) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நேற்று நண்பர் சூர்யா, வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு."
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை நண்பர் சூர்யா வழங்கியுள்ளார். அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! ஜெய்பீம் போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்! எனவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

0 Comments