சூப்பர்ஸ்டார்   ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படம் கிராமத்து கதையம்சத்தில் தயாராகி உள்ளது. பாடல்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

          மேலும் இப்படத்தின்  படத்தின் ட்ரெய்லர் 5.7 மில்லியன் பார்வைகளை கடந்து யூயுயூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

          இந்தநிலையில், மகள், மருமகன், பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.  மேலும் படத்தை பார்த்த தனது பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.