தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் .தற்போது வரும் படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை சேர்த்து நடிக்கிறார்.நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

                 இது குறித்து மாநகராட்சி தெரிவிப்பது என்ன வென்றால்,அவரின் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து காட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் வீட்டை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.

                  18 ஆண்டுகளுக்கு முன் 2400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோர், தன்னிடம் விற்று விட்டதாகவும், பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் எனவும் தெரிவித்துள்ளார்.