உலகக்கோப்பை டி20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில்   பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா மூன்று வெற்றிகளை பெற்று தங்களுக்குரிய புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
          இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டி20 உலகக் கோப்பைக்கான இறுதி போட்டியில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்துள்ளார். அதாவது நவம்பர் 14-ம் தேதி துபாயில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் என்று அவர் கணித்துள்ளார்.இதனை அவர் தன்னுடைய டுவிட்டரில் "இங்கிலாந்து vs பாகிஸ்தான் இறுதிப் போட்டியா?" என்று பதிவிட்டுள்ளார்.